காயத்ரி..
நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.
18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை.
எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து மெஹா ஹிட் அடித்துள்ள விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், வழக்கமாக டீசண்ட்டாக போஸ் கொடுக்கும் காயத்ரி இப்படியே போனால் வாய்ப்பு வராமல் போய்விடுமோ என நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை. திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.