புஷ்பவனம் குப்புசாமி பேட்டிக்கு பதிலடி கொடுத்த செந்தில்-ராஜலட்சுமி : திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!

976

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தது.

மேடை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இப்போது அதிக படங்களில் பாட ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, நாங்கள் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள் இசையை சிலர் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் என்று சிலரை குறிப்பிட்டு கூறியிருந்தார்.

இதுகுறித்து செந்தில்-ராஜலட்சுமி ஒரு பேட்டியில், மூத்த கலைஞராக நாட்டுப்புற கலைக்கு அவருடைய பங்கு மிக முக்கியமானது. நாட்டுப்புற இசை வெறும் இசை மட்டும் இல்லை, அது சாதி அரசியலைப் பேசக்கூடிய ஒரு கலை. குழந்தைகள், பெண்கள் என எங்களது பாடல்களை கேட்கிறார்கள் அதற்கு ஏற்றர் போல் தான் யோசித்து பாடுகிறோம்.

முந்தைய காலத்தில் வேலை செய்யும் கலைப்பு தெரியக் கூடாது என்பதற்காக ஆடி, பாடுவார்கள். இதை நான்தான் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றேன் என்று யாருமே சொல்ல முடியாது. ஒரே இடத்தில் உட்கார்த்து இருந்துகொண்டே பாடுவதையும் நாட்டுப்புற கலை என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் திமீராக பேசுகிறார், சரியில்லை இவர்கள் என மோசமாக அந்த பேட்டி குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.