வித விதமாய் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்த கீர்த்தி சுரேஷ்!!

5946

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து சுலபமாக சினிமாவில் நுழைந்தவர் தான்.

ஆனால், அதை தக்க வைத்துள்ள அவரது தனித்திறமையை உலகிற்கு காட்டி ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ்

தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து டாப் இடத்தை தக்கவைத்தார். மகாநடி திரைப்படத்தில் நடித்து மிகசிறந்த நடிகை என தேசிய விருதை வென்றார்.

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் யோகா தினத்தை முன்னிட்டு வித விதமாய் யோகாசனங்கள் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.