இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் தற்சமயம் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதில் பிசியாக தற்போது நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவர் தன் சொந்த வாழ்க்கை பற்றி தற்போது பேசியுள்ளார். நான் இன்னும் சிங்கிள் தான் என கூறியுள்ள அவர், தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.
”ஆனால் சின்ன வயதில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ய் ஆசை இருந்தது. தற்போது அவர் மீது அதிக மரியாதை உள்ளது” என அவர் மேலும் பேசியுள்ளார்.
யாஷிகா ஆனந்த் இப்படி ஓப்பனாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாய் பிரென்ட் உடன் திருமணம் முடிந்த பிறகு சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டும் என ஆசை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.