இளம் பெண்ண ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மிரட்டல் விட்ட இயக்குனர் கைது!!

948

அண்மைகாலமாக சினிமாவில் Me Tooல் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை புகார்களாக வெளியிட்டு அதிர்ச்சியை எற்படுத்தினர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த 45 வயது நடிகர் தீபக் ஜெயின் தற்போது சிக்கியுள்ளார். சினிமாவில் காஸ்டிங் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் காதலியை தாக்கியதாக வந்த புகாரால் அவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளியன்று தீபக் ஜெயின் என்பவர் ஜாக்கேஸ்வரி ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் “சில நாட்களுக்கு முன் இளம் பெண்(25) வேலை தேடி ஹரியானாவிலிருந்து மும்பை வந்துள்ளார். அங்கு அவருக்கு அவர் ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சியின் நடிகை ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் அந்த பெண்ணை தன் நண்பர் ஜெயினுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின் அந்த பெண்ணும் ஜெயினும் தொடர்பில் இருந்துள்ளனர். பின்னர் அந்த பெண் வேறொருவருடன் காதலில் இருப்பதாக சந்தேகப்பட்ட ஜெயின் அவரை துஷ்பிரயோகம் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். இருப்பினும் தன் வழிக்கு வந்துவிடுமாறு அவர் வற்புறுத்த அந்த பெண் தொடர்ந்து மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் அந்த பெண்ணின் உடையில்லா புகைப்படங்களை அவளின் உறவினர்களுக்கு அனுப்பி சமாதானத்திற்கு கூப்பிட்டுள்ளனர். இந்த விசயத்தை உறவினர்கள் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் கூற பின் அவள் போலிசில் புகார் அளிக்க தீபக் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.