த்ரிஷா..
த்ரிஷாவுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவே திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்னமும் த்ரிஷா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
இந்நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் புதிதாக வீடியோ போட்டுள்ள பயில்வான் ரங்கநாதன் த்ரிஷா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை எழுப்பி ஏகப்பட்ட பகீர் கிளப்பும் தகவல்களையும் அடுக்கி உள்ளார்.
அலை படத்தில் நடிக்கும் போதே த்ரிஷாவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் லிப் லாக் கிஸ் அடித்த புகைப்படங்கள் எல்லாம் அப்பவே பரபரப்பாக வெளியாகி ரசிகர்களையும் சினிமா உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.
மேலும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் இருவரும் எல்லை மீறி நடித்திருப்பார்கள் என்றும், சமீபத்தில் கூட இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியானதும் மீண்டும் வலம் வர காரணமே த்ரிஷா தரப்பு கிளப்பியது தான் என்கின்றனர்.
சிம்பு த்ரிஷாவை விட்டு நயன்தாரா பக்கம் சென்றதும், அவசர அவசரமாக தொழிலதிபர் வருண் மணியன் உடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து திருமணம் வரை சென்ற நிலையில், திடீரென அந்த திருமணம் நடைபெறாமல் தடைப்பட காரணமே த்ரிஷாவின் ரகசியங்கள் வருண் மணியனுக்குத் தெரிந்தது தான் என பகீர் கிளப்பி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
அதன் பிறகு பல தொழிலதிபர்கள் மாப்பிள்ளைகளை த்ரிஷாவின் அம்மா பார்த்து வந்தாலும், இன்னும் ஒருத்தரும் த்ரிஷாவுக்கு ஓகே சொல்லவில்லை என்றாலும், மாப்பிள்ளைக்கு ஓகே ஆனால், த்ரிஷா அதை தட்டிக் கழித்து விடுவார் என்றும் கூறியுள்ளார்.
40 வயதாகி விட்ட நிலையில், இளம் வயது மாப்பிள்ளையை அம்மா த்ரிஷாவுக்காக தேடி வருவது தான் அவருக்கு இன்னமும் திருமணம் நடைபெறாமல் இருக்க காரணம் என்றும் பயில்வான் ரங்கநாதன் அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து இருக்கிறார்.