மகிமா நம்பியார்..
கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார்.
ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் இவருக்கு மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.