ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இளம் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

2137

பிரக்யா நாக்ரா..

நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கையில் டைரி வைத்து கவிதை எழுதுவதுபோல அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன்ன பாத்தாலே லவ் பண்ண தோணுது’ என உருகி வருகின்றனர்.