எப்பவும் நீங்க தான் எவர்கிரீன் பியூட்டி… வைரலாகும் திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

4576

திரிஷா…

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்தவர்.

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார். கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து தான் லைம் லைட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வார்.

இந்நிலையில், பொன்னியில் செல்வன் டீசர் வீடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் புடவை கட்டி அவர் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் திரிஷா குந்தவையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.