அனுபமா பரமேஸ்வரன்..

மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம். இப்படம் மலையாளம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.

இதில் சாய்பல்லவி , அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட மூன்று நடிகைகளும் அறிமுகமானார்கள். அவர்கள் மூன்று பேருமே முதல் படத்திலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் மார்க்கெட் பிடித்தனர்.

அதில் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தார் இருந்தும் அவரால் மார்க்கெட் தக்க வைக்க முடியவில்லை.

இதையடுத்து தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டீவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுபமா தற்போது புளு நிற சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
                

