மகிமா..
தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் மகிமா நம்பியாரும் ஒருவர்.
ஆர்யாவுடன் இவர் நடித்த ‘மகா முனி’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்த ஐங்கரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம், அழகான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் க்யூட் ரியாக்ஷன் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.