ரம்யா பாண்டியன்..
டம்மி டப்பாசுன் படத்தில் சின்ன கதாபத்திரங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி விருதுகளை வென்றார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது கிளாமர் போட்டோ ஷூட்டில் தான். ஆம், இடுப்பு கிளாமரை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் வைரலாகினார்.
அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று புகழுடன் அரட்டை அடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது பார்ட்டி உடையில் செம கிளாமர் காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.