ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ விஜய்கிட்ட அசிங்கப்பட்டுடேன் ! இனிமே அவருக்கு கதை சொல்ல மாட்டேன் ! முன்னணி இயக்குனர் கொ லவெறி !

757

இயக்குனர் ஹரி அவர்கள் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என எல்லா ஏரியாக்களிலும் கில்லி. நடிகர் பிரஷாந்த் அவர்களை வைத்து ‘ தமிழ் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஹரி. இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியே !

ஆனால் சமீபகாலத்தில் தோல்வியை சந்தித்து வந்த இயக்குனர் ஹரி, சாமி 2 – க்கு பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். மேலும், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் அருவா என்று ஒரு படம் செய்வதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேல் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் கூறியுள்ளார். ஆனால் பல காவியங்களை செய்துகொண்டிருந்த விஜய் அப்போது இந்தப் படத்தை நிராகரித்துள்ளார்.

இவர் மறுத்த நல்ல நேரம், வேல் படம் மாஸ் ஹிட் அடித்தது. இப்போது கண்டிப்பா ஒரு வாய்ப்பு கொடுப்பார் என சிங்கம் படத்தின் கதையை விஜய்யை சந்தித்து கூறியுள்ளார். அதையும் முழுசாக கேட்ட விஜய் வேண்டாமென்றே நிராகரித்துள்ளார்.

கடுப்பான ஹரி ஒருமுறையல்ல இரண்டு முறை விஜய்யிடம் கதை சொல்லி அசிங்கப்பட்டு விட்டேன். இனி அவருக்கு கதை சொல்லபோவதில்லை என முடிவு செய்துள்ளாராம் .