சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷ்மிகா : எவ்வளவு தெரியுமா?

1001

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார் ராஷ்மிகா மந்தனா.

அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. தற்போது அவர் விஜய் தேவரக்கொண்டாவின் டியர் காம்ரேட் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும் நடிகர் கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகி நடித்துவருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துவிட்டராம். ஒரு படத்திற்கு சம்பளமாக 80 லட்சம் ரூபாய் கேட்கிறாராம். வளர்ந்துவரும் நடிகை இவ்வளவு சம்பளம் கேட்பது பல தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாம்.