ரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது : NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சைப் பதிவு!!

890

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி, NGK பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரகுலின் நடிப்பை அவர் மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு அந்த பதிவில் சாய் பல்லவியின் நடிப்பை அவர் பாராட்டி, ரௌடி பேபியின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த பதிவில் NGK என்பதற்கு பதிலாக YGK என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் மற்றொரு பதிவில் ரகுலை ஆபாசமாக அவர் வர்ணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.