கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக காட்டிய பிக்பாஸ் சுஜா : ஒன்று கூடிய பிரபலங்களின் மனைவிகள்!!

1090

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. தமிழில் சில படங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் அமையவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக நண்பரான கணேஷ் தன் மனைவி நிஷாவுடன் சுஜாவுக்கு ஹோட்டலில் விருந்து வைத்துள்ளார்.

அண்மையில் Get Together சந்திப்பில் டிவி சானல் பிரபலம் அஞ்சனா, இயக்குனர் அட்லீ மனைவி பிரியா, ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி ஆகியோர் இணைந்துள்ளனர். இதில் சுஜாவும் கலந்துகொண்டார்.

தன் தாய்மையை அழகாக வெளிப்படுத்தும் விதமாக அவரை அவரின் கணவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.