ஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி நடிகை : கொந்தளித்த மற்றொரு நடிகை!!

875

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது ரொம்ப குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செல்வது வழக்கமானது.

அதை ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ள நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஜிம்முக்கு ஒர்க்அவுட் செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜான்வி கபூர் அணிந்து வரும் ரொம்ப, ரொம்ப குட்டியான ஷார்ட்ஸை பார்த்து தான் கவலையாக உள்ளது.

அவர் நான் போகும் ஜிம்முக்கும் வருகிறார். அடிக்கடி சேர்ந்து ஒர்க்அவுட் செய்கிறோம். ஜான்வி பற்றி சில நேரம் கவலையாக இருக்கும் என்று கூறினார்.