முன்னழகை தூக்கலா காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத்!!

3479

கங்கனா..

அமீர்கானின் லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை நடிகை கங்கனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா. டுவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்த கங்கனா, அரசியல் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிடுவார்.

அவ்வாறு செய்ததன் காரணமாக இவரின் டுவிட்டர் கணக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் முடக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் கங்கனா.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு கணக்கு இருந்தாலும், அதனை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அதில் முடக்கப்பட்ட முக்கிய பிரபலங்களின் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அந்த வகையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கும் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ள கங்கனா, தான் மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்தால் உங்களுக்கு நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கானை வெளுத்து வாங்கி உள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசான லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள கங்கனா, அமீர்கானின் இந்தியாவுக்கு எதிரான பேச்சு தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

2 கோடிக்கு கூட ஒர்த் இல்லாத நடிப்பை வெளிப்படுத்திவிட்டு 200 கோடி சம்பளம் வாங்குவது எந்த வகையில் நியாயம் என கேட்டுள்ள அவர், படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது அநியாயம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.