என் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள் : தவறாக பரவிய விடியோவால் கதறி அழுத பிரபல நடிகை!!

1051

டிவி நடிகை ரூஹி சைலேஸ்வர் சிங் என்பவர் சமீபத்தில் குடித்துவிட்டு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீஸ் ஒருவரையும் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாக பரவியது.

ஆனால் அது பற்றி மீடியாவில் செய்தி வெளியான போது அதில் வேறொரு நடிகை ருஹி சிங்கின் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் மிஸ் இந்தியாவான ருஹி சிங் முன்னணி மீடியாக்களில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் என் நல்ல பெயரை முழுமையாக அழித்துவிட்டீர்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார் ருஹி சிங்.

“அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என் புகழ் மற்றும் வாழ்க்கையை அளித்துவிட்டீர்கள். முன்னணி மீடியாக்கள் கூட எதையும் விசாரிக்காமல் என் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளீர்கள்” என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.