புதிய வீடு வாங்கிய தமன்னா : விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்!!

1235

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா அங்கு தான் பிறந்து வளர்ந்தார்.

தற்போது தமன்னா மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளாராம். அதற்காக அவர் செலவிட்ட தொகை பற்றி அறிந்தால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும். கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் இடம் என்பதால் அவர் இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளார்

Versova-Juhu லிங்க் ரோட்டில் Bayview என்ற அபார்ட்மெண்டில் 14வது தளத்தில் தான் தமன்னா வீடு வாங்கியுள்ளார். ஒரு சதுர அடிக்கு 80,778 ருபாய் அவர் கொடுத்துள்ளார். மொத்தம் 16.6 கோடி ருபாய் தமன்னா பில்டருக்கு கொடுத்துள்ளார். அதோடு ஒரு கோடி ருபாய் வரி மற்றும் பதிவு செய்வதற்கு செலவாகியுள்ளது.