பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த நடிகை : என்ன செய்தார் தெரியுமா?

1336

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளராக கமலால் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த வகையில் ஆறாவதாக வீட்டிற்குள் சென்றவர் விளம்பர மாடல் அபிராமி. அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே பசிக்குது பசிக்குது என பறந்தார் அபிராமி.

உள்ளே நுழைந்த உடனேயே தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். பின்னர் மினி சைஸ் லாரி போன்று அமைக்கப்பட்டிருந்த கிச்சனில் பூட்டப்பட்ட ஃபுரூட்டி ரேக்கை திறக்க முயற்சித்து சேதப்படுத்தினார்.

அதோடு மட்டுமின்றி கேமராவை பார்த்தும் சாப்பாடு வேண்டும் என கேட்டு சைகை செய்தார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சைலன்ட்டாக இருக்க நுழைந்தவுடனேயே பசிக்குது பசிக்குது என தான் தன்வீட்டில் இருப்பதுபோல் காட்டிக்கொண்டார் அபிராமி.

இது மற்ற போட்டியாளர்களை எரிச்சல் படுத்துவது போல் இருந்தது. அதோடு நிகழ்ச்சியை பார்த்த நேயர்களும் அபிராமியின் நடவடிக்கையால் கடுப்பாகினர்.

அவருக்கு சூடு போடும் வகையில் கமல்ஹாசன் தனது கேமராமேனான ரோபோ சக்ரவர்த்திரை நாசுக்காக சாடினார். எனக்கும் தான் பசிக்குது நான் இப்படியா கூப்பாடு போடுகிறேன்? இதுலேயே தெரிகிறது நீ சின்னப்பையன் என கூறி நிகழ்ச்சிக்கு பிரேக் விட்டார்.