பிக்பாஸ் வீட்டில் வளர்ந்தது புதிய காதல்… கவீனைப் பற்றி ஷெரீனிடம் கூறிய அபிராமி!!

1151

பிக்பாஸ் வீட்டின் இன்றைய முதல் நாள் போட்டியாளர்களிடையே கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றது. இதில் குறிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கட்டாசலம் நள்ளிரவு ஷெரீனிடன் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

அதில் எனக்கு சீரியலே பிடிக்காது. ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் வரும் போது மட்டும் பார்ப்பேன். அதில் நடிக்கும் தமிழ் பையன் பார்க்க அழகாக இருப்பான், என்று அம்மா கூறும் போது அவன் என்னுடைய பேஸ்புக் நண்பர் என்று கூறினேன்.

ஆனால் அது போலி பேஸ்புக் என்பதை கண்டுபிடித்தேன். அதன் பின் அவரின்(கவீன்) ஒரிஜினல் ஐடிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போது கூட அவர் செம ஸ்மார்ட்டாக ஆம் போலி ஐடி நிறைய இருக்கிறது என்று கூறினான். அவன் மீது எனக்கு ஒரு வித Crush இருந்தது.

இதனால் நான் இங்கு வந்தவுடன் முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். நான் அவன் மீது க்ரஸாக இருந்தேன் என்று கூறினாள், கேவலமாக போய்விடும் என்று அமைதியாக இருந்தேன்.

அவன் ஒரு நல்ல மனிதன், நான் ஒரு நடிகன் என்ற திமிர் இல்லை, இறங்கி வேலை பார்க்கிறான் என்று பேசினார். அப்போ முதல் சீசனில் எப்படி ஓவியா-ஆரவ்வோ, இரண்டாவது சீசனில் யாசிகா-மகத்தோ அதே போன்று மூன்றாவது சீசனில் கவீன்-அபிராமியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.