கல்யாணம் ஆகாமல் கர்ப்பமா… நிறைமாத கர்ப்பிணியாக ஃபோட்டோ போட்ட நித்யா மேனன்!!

2830

நித்யா மேனன்..

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் ரம்யா கிருஷ்ணன், கங்கனாவை போல, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக இருந்தார்.

இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படத்தை பற்றிய ஒரு செய்தி கூட தற்போது வரை வரவில்லை.

இவர் தற்போது, நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த “தீனி” படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன்பிறகு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில், கர்ப்பிணியாக ஒரு படத்தில் நடித்து வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தான் கர்ப்பிணியாக இருக்கும போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளதால் ரசிகர்கள் அதுக்குள்ள இவ்ளோ பெரிய வயிறா… என கமெண்ட் அடித்து வருகின்றனர்.