கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து சம்யுக்தா ஹெக்டேவும் நடிக்கிறார். மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.
இவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.