யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங்துறையில் இருந்து வந்த யாஷிகா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கிளாமரில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதனைதொடர்ந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு படுகாயங்களுடன் படுத்த படுக்கையில் இருந்தார். தோழியை இழந்ததோடு 4 மாதங்களாக சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார்.

அதனைதொடர்ந்து படங்களில் நடித்து கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த யாஷிகா ஆனந்த்-திடம், யாராவது தவறாக நடந்து கொண்ட விசயம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து யாஷிகா, ஆம், சந்தானம் சார் படத்தின் ஷூட்டிங்கின் போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நபர் என் பின்பக்கமாக தட்டினார். திரும்பி பார்த்து அந்த நபரை பிடித்து அந்த இடத்தில் அடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் விர்ஜினா? என்ற கேள்விக்கு இல்லை நான் ஏர்டெல் என்று பதிலடி கொடுத்துள்ளார்.



