பிக்பாஸ்-3யின் புதிய போட்டியாளர் மீரா மிதுனின் உண்மை முகம் இதுதானா? ஷாக்கிங் ரிப்போர்ட்!!

846

பிக்பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களின் பிண்ணனியில் பல கதைகள் உள்ளன. அதிலும் புதியதாக நுழைந்துள்ள மீரா மிதுனிற்கும் சர்ச்சைக்கும் வெகு தூரம் இல்லை.

மீரா கடந்த மாதம் சிலர் தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவோம், கொலை செய்வோம் என மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் இவர் நடத்தவிருந்த அழகி போட்டியில் பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்டதாக கூறி இவருக்கு வழங்கியிருந்த மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களை வழங்கிய அமைப்பு திரும்ப பெற்று கொண்டது.

மேலும் மீரா தனது பட்டங்களை இழந்தாலும் அவருக்கு போன் செய்தால் தனது பெயர் மிஸ் சவுத் இந்தியா, மிஸ் சென்னை உள்ளிட்ட பட்டங்களை கூறிவிட்டு தான் பேசு தொடங்குவார் எனவும் நடிகர் சிம்பு தன்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாக மீரா அடிக்கடி கூறுவார் எனவும் அவர் பக்கா ப்ராடு எனவும் அவருடன் பணிப்புரிந்த ஜோ மைக்கல் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.