திருமணமான மதுமிதாவிடம் லவ் புரோபஸ் : பிக் பாஸில் தொடங்கிய சர்ச்சை!!

970

மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேறு முன் தினம் தொடங்கியது. இயக்குநர் சேரன், நடிகர்கள் சரவணன், கவின், நடிகைகள் பாத்திமா பாபு, ஜாங்கிரி மதுமிதா, ரேஷ்மா, அபிராமி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

நேற்று நிகழ்ச்சியின் முதல் எப்பிசோட் தொடங்கிய நிலையில், போட்டியாளர்களுக்கு டாஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் சொல்லும் டாஸ்க்கை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார்.

அதன்பை, மலேசிய மாடல் முகனிடம் போட்டியாளர்கள் யாரிடமாவது லவ் புரோபோஸ் செய்ய வேண்டும், என்று கூறினார்கள். உடனே அவர், திருமணமான ஜாங்கிரி மதுமிதாவிடம் தனது காதலை சொல்ல, அனைவரும் ஷாக்காகிவிட்டார்கள்.

ஆனால், இங்கு தான் முகிலின் சாமர்த்தியம் இருக்கிறது. திருமணமான மதுமிதாவிடம் காதலை சொன்னால் அது பெரிய சர்ச்சையாகாது, அதே பிற பெண் போட்டியாளர்களிடம் காதலை சொல்லியிருந்தால், ஓவியா – ஆரவ் ஜோடி போன்ற ஒரு காதல் ஜோடியை உருவாக்கிவிட்டிருப்பார்கள். அதில் சிக்காமல் இருக்கவே அவர் மதுமிதாவிடம் காதலை சொல்லியிருக்கிறார். அதுக்கு, பாத்திமா பாபுவிடம் சொல்லியிருக்கலாமே.