நயன்தாரா..
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தனது அழகு மற்றும் நடிப்பு மூலம் தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
தொடர்ந்து திரைப்படங்களில் தனக்கென ஒரு பாதையில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதனால் தான் மக்கள் அதிகம் ரசிக்கும் நடிகையாக வலம் வருகிறார். இதனிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் திரைப்படம் ஒன்றின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் மிகவும் இறுக்கமான கவர்ச்சி ததும்பும் ஆடையில் வந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் வைரலாக வருகின்றது.