மகாலட்சுமி..
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சில வருடங்களுக்கு முன் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகாலட்சுமி ஈஸ்வருடன் தொடர்பில் இருந்தார்.
அந்த விசயம் பெரியளவில் பிரச்சனையை ஏற்படுத்தியதால் அவரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இரு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு ரவீந்தரை காசுக்காக கல்யாணம் செய்தார் என்று மகாலட்சுமி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது சீரியலை தவிர்த்து விளம்பரங்களில் ஈடுபட்டு காசு பார்த்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின் மாடர்ன் ஆடையில் இருந்த மகாலட்சுமி திருமணத்திற்கு பின் சேலையில் மட்டும் காட்சியளித்தார். தற்போது குட்டையாடையில் மாடர்ன் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.