விஜய்சேதுபதி படத்திலிருந்து அதிரடியாக நீக்கம் : தயாரிப்பு நிறுவனத்தை விளாசி தள்ளிய அமலாபால்!!

976

நடிகை அமலாபால் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் ஹீரோயினாக பணியாற்றவுள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு கால்ஷீட் பிரச்சனையால் அமலா பால் இப்படத்தில் இருந்து விலகுகிறார், அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார் என படத்தை தயாரிக்கும் சந்திரா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதுக்குறித்து அமலா பால் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், இதில் என்னை தயாரிப்பாளர் கால்ஷீட் பிரச்சனையால் தான் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், அதில் உண்மையில்லை, நான் தயாரிப்பாளர் கஷ்டம் உணர்ந்து நடிப்பவள், பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் கூட என் பணத்தை விட்டு தான் படத்தை ரிலிஸ் செய்தோம்.

மேலும், ஆடை டீசர் வந்த பிறகு தான் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது, தயாரிப்பாளர் ஒரு ஆணாதிக்க குணம் உள்ளவராக தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.