மீராவுடன் என்ன தான் பிரச்சனை? உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிராமியின் அம்மா!!

1291

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தனது மகள் அபிராமியை மீரா வம்புக்கிழுப்பது போல இருப்பதாக கூறியுள்ள அவர் தாய் அதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக இரு தினங்களுக்கு முன்னர் மீரா மிதுன் நுழைந்தார். இதன்பின்னர் அபிராமிக்கும் ,மீராவுக்கும் பிரச்சனை இருப்பது போல ப்ரோமோ காட்டப்பட்டது.

இது குறித்து பேசிய அபிராமியின் தாய், அபிராமியும், மீராவும் மாடலிங் என்ற ஒரே துறையை சேர்ந்தவர்கள். ஒருவரும் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் ஒன்றாக சந்தித்துள்ளனர், இருவருக்கும் சிறிய நட்பு இருந்தது.

அதன்பின்னர் இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்திருக்கலாம், அது குறித்து நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் இருவருக்கும் வெவ்வேறு குணம் இருக்கலாம். எனக்கு என் மகளை பற்றி தெரியும், ஆனால் மீராவை பற்றி அதிகம் தெரியாது.

கடைசியாக பார்த்த பிக்பாஸ் புரோமோவி, அபிராமியை மீரா வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது போல உள்ளது. மீரா முதல் நாள் வரும் போதே அவரை பிடிக்காதது போல பலரும் முகபாவனையை காட்டினார்கள். அப்படியென்றால் மீராவிடம் எதோ பிரச்சனை இருப்பதாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.