
மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார். இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி,

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார்.

மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

இவர், சமீபத்தில் ஆரஞ்சு வண்ண உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “ஹல்லோ, மஞ்ச சொக்கா” என்று கலாய்ப்பது போல கமென்ட் அடித்திருந்தார்.

இதனை பார்த்த ப்ரியா பவானி ஷங்கர் “அது ஆரஞ்ச் சொக்கா முருகேசா..” என்று அவருடைய Styleலேயே பதில் சொல்லிருக்கிறார்.




