ப்பா… செம கியூட்.. காஜல் அகர்வாலின் ஹாட் வீடியோவை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

1277

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனார்.

இதைத் தொடர்ந்து, நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும் படி புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது.

குழந்தை பிறந்ததையும், அதற்கு சூட்டியுள்ள பெயரையும் வெளியிட்ட காஜல் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.இதனிடையே தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள காஜல் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.