பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா? போட்டியாளராக இல்லை, எப்படி நுழையவுள்ளார் பாருங்கள்!!

1170

பிக்பாஸின் முதல் சீசனின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் ஆரவ்வுடன் காதல் என இவரது ட்ராக் மாறினாலும் மக்கள் இவர் மேல் வைத்திருந்த அன்பு குறையவில்லை.

பிறகு இரண்டாவது சீசனின் துவக்கத்தில் கெஸ்ட்டாக நுழைந்தவர் அதன் பின் சில படங்களிலும் நடித்துவிட்டார். இந்நிலையில் ஓவியா கதாநாயகியாக விமலுடன் நடித்துள்ள களவாணி-2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால் இதற்கு ப்ரமோஷன் தேடி கொள்வதற்காக ஓவியா பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் ஒரு நாள் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஓவியா பிக்பாஸ் வீட்டில் வந்தால் அன்று டிஆர்பி எகிறும் என்பதால் பிக்பாஸும் இதற்கு அனுமதிப்பார் என்றே தெரிகிறது. கடந்த சீசனில் கூட கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்திற்காகவும் ஹரிஷ் கல்யான் பியார் ப்ரேமா காதல் படத்திற்காகவும் சென்றது குறிப்பிடத்தக்கது.