புதுமுகங்களின் அட்டகாசமான நடிப்பில் தொரட்டி : திரைவிமர்சனம்!!

1118

தொரட்டி

தயாரிப்பாளர் மற்றும் அறிமுக நாயகன் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் ஹீரோவின் குடும்பத்தினர். அங்கே நிலவும் க டும் வறட்சியினால் அங்கிருந்து இடம் பெ யர்ந்து மதுரைக்கு வருகிறார்கள்.

அங்கே ஹீரோவுக்கு மூன்று தி ருடர்கள் நண்பர்களாகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து கு டி, சூ தாட்டம் என அலைகிறார். இதனால் கவலை கொள்ளும் ஹீரோவின் அப்பா, பலரின் எ திர்ப்பை மீறி உறவினர் மகளை ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

அந்த நேரம் பார்த்து ஒரு தி ருட்டு வழக்கில் ஹீரோவின் நண்பர்களான மூன்று தி ருடர்களும் சி றை செல்கின்றனர். அதற்கு காரணம் நாயகி தான் என்று அவர்களுக்கு தெரிய வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வரும் தி ருடர்கள் ஹீரோயினை ப ழி தீ ர்க்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. 1980களில் நடக்கும் கதையில் அந்த காலத்திய கிராமங்களை முடிந்த வரை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

கிராமத்து பின்னணி ஹீரோ, ஹீரோயின் என அந்தந்த வே டத்துக்கு சரியான கதாப்பாத்திரத் தேர்வு தான் படத்துக்கு பிளஸ். பெரும்பாலானோர் முடிந்த வரை நடிகர்களும் தங்களால் இயன்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

வேத் ஷங்கருடைய பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது நன்றாக இருந்தது. ஜித்தின் கே. ரோஷனின் பின்னணி இசையும் படத்துக்கு துணை புரிந்திருக்கின்றன. ஒளிப்பதிவில் இன்னும் சற்றும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆடு மேய்ப்பவர்ளின் வாழ்வியல், அவர்களுடைய மொழி மற்றும் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என இயல்பாக கதை நகர்கிறது. படத்தில் வரும் பெரும்பாலான தி ருப்பங்களை முன் கூட்டியே கணிக்க முடிகிறது.

மேலும் மற்ற எல்லா விஷயங்களிலும் தெளிவானவராக காட்டப்படும் ஹீரோ, பணத்துக்காக தான் தன்னிடம் மூன்று தி ருடர்களும் பழகுறார்கள் என்று தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் கதையை இயல்பாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த தொரட்டி
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொன்ன விதத்திற்காக இந்த தொரட்டியை ஒரு முறை பார்க்கலாம்.