“குருக்ஷேத்திரம்” திரைப்படம் ஒரு பார்வை!!

1306

குருக்ஷேத்திரம்

விருஷபத்ரி புரொடக்ஷன் தயாரித்து வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டிருக்கும் படம் குருக்ஷேத்திரம். நமக்கு தெரிந்த மஹாபாரதக் கதையை துரியோதணனை முதன்மைபடுத்தி சொல்லியிருக்கும் படம் தான் குருக்ஷேத்திரம்.

துரியோதணனாக தர்ஷன். தனது வலிமையான உடல் மொழியால் ஈந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். கர்ணனாக இந்த படத்துக்கு ஆகப் பெரும் பலம் சேர்த்திருக்கிறார் அர்ஜூன். குறிப்பாக போ ர் காட்சிகளில் தான் ஏன் ஆக்ஷன் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

திரௌபதியாக சினேகா. தன்னை பாண்டவர்கள் சூதாட்டத்தில் இழந்தது குறித்து கேட்டதும் அதிர்வது பின்பு தன்னை அசிங்கப்படுத்திய துரியோதணனுக்கு எதிராக சாபம் விடுவது என அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். சகுனியாக ரவிஷங்கர், அபிமன்யூவாக நிகில் என தங்களுக்கு கொடுத்த வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

சக்கர வியூகம் உள்ளிட்ட போர் தந்திரங்களை தெளிவாக காட்சிகளாக நன்றாக சொல்லப்பட்டிருந்தது. மேலும் போ ர்காட்சிகள் நன்றாக வடிவமைக்கபப்பட்டிருந்தது. விஎஃப்எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

இசையமைப்பாளர் ஹரிகருஷ்ணாவும் ஒளிப்பதிவாளர் ஜெய் வின்சென்ட்டும் படத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். துரியோதணன் கதாப்பாத்திரத்தின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பாண்டவர்களுக்கான காட்சிகள் குறைவாகவே இருக்கிறது.

எனவே மஹாபாரதக் கதை தெரிந்தவர்களுக்கு மட்டுமே பாண்டவர்களின் குணாதிசயங்கள் தெரியும் என்பதால் போர் காட்சிகளின்போது சற்றுக்குழப்பம் ஏற்படலாம். முதல் பாதியில் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனாலும் துரியோதணன் வழியாக கதை சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறது இந்த குருக்ஷேத்திரம். மஹாபாரதத்தை மாறுபட்ட கோணத்தில் சுவாரசியமான போர்காட்சிகளுடன் சொன்னவிதத்திற்காக ஒரு முறைபார்க்கலாம்.