லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொ லையுதிர்காலம் : திரைவிமர்சனம்!!

1235

கொ லையுதிர் காலம்

பிரிட்டனின் சஸ்ஸெக்ஸில், ஒரு பிரமாண்ட எஸ்டேட் உள்ளிட்ட பல சொத்துகளின் உரிமையாளர் அபா லாசன். அவரது இ றப்புக்குப் பிறகு அந்தச் சொத்துகளும், அவர் நிர்வகிக்கும் அறக்கட்டளைகளின் பொறுப்புகளும் அபா லாசன் தத்தெடுத்த மகளான நயன்தாராவின் கைக்கு வருகிறது. சொத்துகள் முறைப்படி பதிவுசெய்யப்பட, லண்டன் செல்லும் நயனுக்கு அபா லாசனின் அண்ணன் மகன் மூலம் மிரட்டல் வருகிறது. அதன்பிறகு நடப்பவற்றை திகில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம் : கொ லையுதிர் காலம்
படத்தின் திரைக்கதையில் காட்சிகளில் ஒரு திகில் படத்திற்கான சுவாரஸ்யமோ எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் பரபரப்போ இல்லை. 110 நிமிடப் படத்தில் நயன்தாரா தத்தெடுக்கப்பட்ட கதையை நீட்டி முழக்கிச் சொல்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு நடக்கும் துரத்தலும், கொலைகளும் எந்தவித உணர்ச்சியையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை.

“யாராச்சும் சீக்கிரம் செத்துத் தொலைங்கப்பா. வீட்டுக்குப் போகணும்” என்பதாகத்தான் இருந்தது பார்வையாளர்களின் மனநிலை. ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ஆனால், இயக்குநர் சக்ரி டோலட்டியின் முந்தைய படங்களின் உழைப்பில் கொஞ்சமும் இதில் வெளிப்படவில்லை. பிரதாப் போத்தன், பூமிகா, ரோஹிணி ஹட்டாங்கிடி ஆகியோருக்கு, படத்தில் நடிப்பதற்கான சவாலான காட்சிகளோ வாய்ப்போ இல்லை.

காது கேட்காத, வாய் பேச இயலாத நயன்தாராவின் பாத்திரம் படத்திற்குப் புதுமையான ஒன்றாகவெல்லாம் இல்லை. ஆனால், இயக்குநர் அதைப் பெரிதும் நம்பியிருக்கிறார், குறிப்பாக அதை மட்டுமே நம்பியிருக்கிறார். அதன்மூலம் ரசிகர்களுக்குப் பரிதாபத்தைக் கடத்த நினைத்தார்களோ என்னவோ, அவர்களுக்கே வெளிச்சம்.

“இந்தத் திரைக்கதைக்கு நாங்க வேற என்னதான் செய்யறது?” என்று பரிதாபமாகக் கேட்பதுபோல இருந்தது ஒளிப்பதிவாளர் கோரி க்ரேயாக், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி ஆகியோரின் பங்களிப்புகள்.‘கொ லையுதிர் காலம்’ என்ற படத்தின் தலைப்பு அளவுக்காவது திகிலூட்டியிருக்கலாம்!