அந்த நடிகருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போவது ஏன் தெரியுமா?

1016

திருமணம்

நடிகர் ஒருவருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நல்ல திறமையான நடிகர் அவர். பெரிய ஆளாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதேதோ நடந்துவிட்டது.

நடிகரின் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருந்ததே தவிர எதுவும் நிலைக்கவில்லை. ச்ச்சீ இந்த காதல் பழம் புளிக்கும் என்று எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார் நடிகர். ஆனால் அவரை அப்படியே விட்டுவிட்ட பெற்றோருக்கு மனம் இல்லை.

நடிகருக்கு வயதாகிக் கொண்டே போவதால் விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். சில இடங்களில் நடிகரை பற்றி தெரிந்து பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்களாம். இதே பிரச்சனை ஏற்பட்ட மற்றொரு நடிகருக்கு தற்போது திருமணமாகிவிட்டது.

ஆனால் நடிகரின் விஷயத்தில் மேலும் சில பிரச்சனை உள்ளது. அதாவது பெண் கொடுக்க சம்மதித்தால் நடிகர் தரப்பில் இருந்து இரண்டு பிரச்சனை ஏற்படுகிறதாம். பெண்ணை நடிகருக்கு பிடித்தால் குடும்பத்தாருக்கு பிடிப்பது இல்லையாம். குடும்பத்தாருக்கு பிடிக்கும் பெண்ணை நடிகருக்கு பிடிப்பது இல்லையாம்.

குடும்பத்தாருக்கும், நடிகருக்கும் எந்த பெண்ணை பிடிக்கிறதோ அவரே மணமகளாம். இதெல்லாம் எப்பொழுது நடந்து, எங்க அண்ணனுக்கு எப்போ திருமணம் நடப்பது என்று ரசிகர்கள் தான் பாவம் கவலையில் உள்ளனர். நடிகருக்கு திருமணம் கைகூடாமல் இருப்பது அவரின் தந்தைக்கு பெரிய வருத்தம்.

மகனை நினைத்தால் மனிதர் கண் கலங்கிவிடுகிறார். கடவுள் தான் தன் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறார் நடிகரின் அப்பா.