வரலாற்று பட ஜோடி மீண்டும் காதல்!!

824

கிசுகிசு

வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவுகிறதாம்.தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக வசூல் ஈட்டிய வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இருவருக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டதாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டார்களாம்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இதனிடையே வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை மணக்க நடிகர் தயாரானதாக தகவல்கள் கசிந்ததாம். இந்த நிலையில் வரலாற்று பட நாயகனும், நாயகியும், அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், இதற்காக அங்கு வீடு பார்க்கும் வேலையை அவர்கள் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதாம். இதன் மூலம் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறதாம்.