சம்பளத்தை தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றினார்கள் : கவலையில் தனுஷ்!!

877

தனுஷ்

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அசுரன்’ என்ற படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இரு பாடல்கள் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தனுஷ் தன்னை தயாரிப்பாளர்கள் ஏமாற்றுவதாக கூறினார்.

இலக்கிய எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது “அசுரன்” திரைப்படம். வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் இப்படத்தில் பசுபதி,மலையாள நடிகை மஞ்சு வாரியார்,இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளனர் படக் குழுவினர். இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி துவங்கப் பட்டது அசுரன் படம். வெகு சீக்கிரத்தில் முடிந்த வெற்றிமாறனின் படமாக இந்தப்படம் கருதப்படுகிறது.இப்படத்தின் பாடல் வெளீடு விழா சென்னையில் நேற்று நடந்தது. இரண்டு பாடல்கள் வெளியானது இதனால், தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அங்கு பேட்டியளித்த தனுஷ் பத்திரிகையாளர்களிடம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பற்றி பேசியதாவது…
கலைப்புலி தாணு மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். இவர் தான் இயக்குநர் எனக்கூறியபின் நாங்கள் கமர்ஷியலாக ஒரு கதை சொன்னபோதும் அவர் தான் இந்த அசுரன் கதை நன்றாக இருக்கிறது இதைச் செய்யலாம் என்றார்.

எனக்கு பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை முழுதாக தராமல் ஏமாற்றினார்கள். இப்போதும் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் ஆனால் முதல் முறையாக படம் முடியும் முன்னரே முழுச்சம்பளத்தையும் தந்த தயாரிப்பாளர் அவர்தான் என்றார்.

கௌதம் மேனன் தயாரித்து இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா பல தடங்கலுக்கு பிறகு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு சம்பளம் முழுதாக தரப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும் இது போல பல தயாரிப்பாளர்கள் தனுஷுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி முதல் முறையாக தனுஷ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.