வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகருக்கு நேர்ந்த சோகம்!

1071

நடிகருக்கு நேர்ந்த சோகம்..

சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கும் அப்பாவாக கருப்பசாமி கோவில் பூசாரியாக நடித்தவர் தவசி. இப்படத்தில் அவர் பொய்யாக சாமி ஆடிக்கொண்டே சொல்லும் கருப்பன் குசும்புக்காரன் என்ற காமெடி அதிக வரவேற்பை பெற்றது.

அவர் தற்போது இயக்குனர் ராஜ் கபூர் எடுக்கும் சீரியலில் நடித்து வருகிறார். திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்ட அவருக்கு காரில் திரும்பி சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து கடும் விபத்திற்குள்ளானது. இதில் அவருக்கு படுகாயமடைந்ததால் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறாராம்.