பிக்பாஸ் வனிதா செய்த சதி : இந்த விஷயத்த கவனிச்சீங்களா – ஆதாரத்துடன் வறுத்தெடுத்த பிரபலம் – யாருக்கு ஆதரவு?

728

பிக்பாஸ் வனிதா செய்த சதி

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது வனிதா, கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன், தர்ஷண், முகென், சாண்டி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளே இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு முன்பே வெளியேற்றப்பட்ட வனிதா தற்போது ஒய்ல்டு கார்டு மூலம் தற்போது உள்ளே மீண்டும் போட்டியாளராக இருக்கிறார்.

இது போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என கூறலாம். அதே போல அவர் வீட்டுக்குள் வந்த போது அபி, முகேன் பிரச்சனையை பெரிதாக்கினார்.

முன்பு அபிராமி, மதுமிதா சண்டையை பெரிதாக்கினார். தற்போது கவினை கார்னர் செய்து வருகிறார். சாக்‌ஷி வெளியே போனதற்கு கவின் தான் காரணம் என கூறிவருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் காஜல் சாக்‌ஷி வெளியே போக கவின் காரணமா? கவின் மேல தப்பு இருந்தால் வெளியே போயிருப்பார். அப்ப வனிதா நீங்க அபி, மது ரெண்டு பேரும் வெளியே அனுப்புனீங்களே அதுக்குள்ள மறந்துட்டீங்களா, அபி, மதுவை உள்ளே அனுப்பிட்டு நீங்க வெளியா வாங்க என அதிரடியாக பேசியுள்ளார்.