சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்.. இவ்வளவு தானா?

826

சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகின்றனர். இங்கு தென்னிந்திய சினிமாவில் வடநாட்டு நடிகைகள் பலரும் இந்த லிஸ்டில் உள்ளனர். ஆனால் இங்கிருந்து சென்று பாலிவுட்டில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே. அசின், த்ரிஷா, காஜல், ராகுல் என பல நடிகைகள் அங்கு நடித்தாலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர்கள் வாங்கும் சம்பளமும் மிக குறைவு தான்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் Mumbai Saga என்ற படத்தில் காஜல் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக காஜல் வெறும் 30 லட்சம் ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட் வாய்ப்பிற்காக சம்பளத்தை இவ்வளவுக்கு குறைத்துவிட்டாரா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.