வறுமையில் இறுதி நாட்கள் : சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் மரணத்தின் அதிர்ச்சி பின்னணி!

1021

சீரியல் நடிகர் மரணத்தின் அதிர்ச்சி பின்னணி!

பிரபல இயக்குனரும் சீரியல் நடிகருமான ராஜசேகர் சில தினங்களுக்கு முன்பு காலமானார். 61 வயதாகும் அவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.

உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சரியான சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவதி பட்டுள்ளனர்.

அவர் நடித்த சீரியலின் இயக்குனர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்த பணமும் சிகிச்சைக்கு போதவில்லை. இந்த நிலையில் தான் ராஜசேகர் உயிரிழந்துள்ளார்.

வறுமை காரணமாக ஒரு முன்னணி இயக்குனர்+சீரியல் நடிகர் இப்படி இறந்திருப்பது சினிமா துறையில் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.