கவின், லாஸ்லியா காதலுக்கு பச்சக்கொடி காட்டிய பிரபல இயக்குனர் : ஆதாரத்தை வெளியிட்டு கடும் கேள்வி!!

877

கவின், லாஸ்லியா காதலுக்கு பச்சக்கொடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விருந்தினர் வாரம் எனலாம். உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து போகிறார்கள்.

இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார்கள். இதில் அண்மையில் வெளிநாட்டிலிருந்து லாஸ்லியாவின் அப்பா, அம்மா தங்கைகள் ஆகியோர் வந்திருந்தனர்.

உள்ளே வந்ததும் காதல் விசயத்தில் லாஸ்லியாவின் நடத்தைகளை கண்டித்து அறிவுரை கூறினார். அதே வேளையில் கவினிடமும் அவர் முகம் கொடுத்து நன்றாக பேசினார். உள்ளே இருந்து சேரனும் அவர்களின் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்த் பாலன் மலையாள பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்ட பியர்ல் மானே மற்றும் சீரியல் நடிகர் ஸ்ரீனிஷ் இருவரும் காதல் வயப்பட்டு பின் பிக்பாஸ் முடிந்து திருமணம் செய்துகொண்டார்கள்.தமிழகத்தில் இன்னும் காதல் எதிர்ப்பு இருக்கிறது? என்ன செய்ய பிக்பாஸ்! அனைவரும் கேம் விளையாடுங்க என அறிவுறுத்துகிறார்கள்.

என்னை பொறுத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானா பிக்பாஸ் வீடு. இங்கே கேம் விளையாடக்கூடாது, வாழத்தானே வேண்டும், வாழும் போது காதல் வருவது சகஜம் தானே என அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ளார்.