தூக்கி எறிந்து பேசிய சேரன் மகள் : தனியாக கூட்டிச்சென்று காதில் ஓதிய ரகசியம் – கண்கலங்கிய சேரன்!!

851

தூக்கி எறிந்து பேசிய சேரன் மகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களாக போட்டியாளர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வுகளாக அமைந்துவிட்டது. முகென் குடும்பத்தாரை தொடர்ந்து, வனிதா மகள்கள், தர்ஷண் குடும்பத்தார், சேரன் குடும்பத்தார் என வந்திருந்தார்கள்.

சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் இருந்து ஞாபகம் வருதே பாடலை போட்டு சேரன் குடும்பத்தாரை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்றனர். அப்போது சேரன் கண்கலங்கி அழ, அவரின் மகள் தாமினி, சேரனின் அம்மா கமலாவும் அழுதுவிட்டார்.

மேலும் சேரனை பார்க்க சேரனின் தங்கை வனிதாவும் வந்திருந்தார். பின் சேரனின் மகள் தன் அப்பாவை தனியே கூட்டிச்சென்று நானும் அக்கா மட்டும் தான் உங்களுக்கு மகள்கள்.

என் தோழிகள் எல்லாம் உங்க அப்பா உன்ன மறந்திட்டாரா. லாஸ்லியா பத்தியே பேசிகிட்டு இருக்கிறாரு என கேட்பதாக சொல்லி வருத்தப்பட்டார்.லாஸ்லியா பக்கமே போகாதீங்க. அவ கூட பேசினீங்கனா நான் டென்சன் ஆகிடுவேன். உங்கள விட்டுக்கொடுத்த லாஸ்லியா கூட பேச்சு வச்சிகாதீங்க என கூறியுள்ளார்.

மேலும் தாமினி லாஸ்லியாவிடம் நீங்கள் எங்க அப்பா பக்கம் நிற்காவிட்டாலும் அவர் உங்க கூட எப்போதும் இருப்பார். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உங்களை சந்திக்க காத்திருக்கிறார்கள் என கூறினார்.