கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் தொடங்கும் முடிவில் சிவகார்த்திகேயன்- இவரது படம் தானா?

893

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உழைப்பின் மூலம் ஜொலித்து வருபவர். ஆனால் கடைசியாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என கூறப்படுகிறது.

அவரது நடிப்பில் அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி நம்ம வீட்டுப் பிள்ளை வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் படம் கமிட்டானார்.

புதிய படத்திற்கு ராகுல் ப்ரீத் சிங் நாயகி என்றும் கூறப்பட்டது. இடையில் பண பிரச்சனையால் கிடப்பில் போடப்பட்ட இப்படம் சிவகார்த்திகேயனின் தலையீட்டிற்கு பிறகு மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.