நாக்கு வறண்டு என் புருஷன் இறந்தார் ஆதாரம் இருக்கு : கண்ணீருடன் கூறிய நடிகர் ராஜசேகர் மனைவி!!

1097

ராஜசேகர்

பிரபல திரைப்பட நடிகரான ராஜசேகர் உடல்நிலை சரியில்லாமல் இறந்த நிலையில், அவர் தற்போது எப்படி இ றந்தார் என்பதை கண்ணீருடன் கூறியுள்ளார்.

பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்ல பேசு போன்ற பல திரைப்படங்களை ராபர்ட்டுடன் சேர்ந்து இயக்கிய ராஜசேகர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் உ யிரிழந்தார்.

இவர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார்.பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் இரண்டாவதாக தாரா என்பவரை திருமணம் செய்தார்.

கணவர் குறித்து தாரா கூறுகையில், முதலில் அவர் எனக்கு நெஞ்சில் எரிச்சல் இருக்கிறது என்று கூறினார். இதனால் அவரை நான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.

அப்போது மருத்துவமனையில் உடலை எல்லாம் பரிசோதித்து விட்டு சிறிய அளவில் சிகிச்சை செய்து, நன்றாக இருக்கிறார், கொஞ்சம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடுவார் என்று மருத்துவமனை அறையில் தங்க வைத்தனர்.

அதன் பின் நான் அவர் குடிப்பதற்கு சுடு தண்ணீர் கேட்டார், அதை எடுப்பதற்காக வெளியில் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் திடீரென்று பார்த்தால் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். என்ன திடீரென்று இவரை இங்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, அவர் கீழே விழுந்துவிட்டார் என்று கூறினர்.

நானும் அவரிடம் கேட்டன், விழுந்துவிட்டேன் என்று கூறினார், அதன் பின் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்தது நல்ல படியாக அவர் வெளியே வந்தார். இரண்டு தினங்களில் மீண்டும் ஏதோ மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனால் மீண்டும் அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்று, முகத்தில் ஏதே, எதோ மாட்டியிருந்தனர். என்னையும் பார்க்கவிடவில்லை. அதன் பின் இதயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று கூறினர்.

அதற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். நான் நம் கணவர் பிழைத்தால் போது என்று கூறினேன், அதன் பின் மீண்டும் நுரைடப்பாவில் தண்ணீர் இருக்கிறது, அது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறினார்கள்.

நானும் சரி என்று கூறினேன், அப்போது நான் நீங்கள் சிகிச்சை பாருங்கள், மருந்து மாத்திரை எல்லாம் தனியாக வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினேன், அதற்கு முன்பு ஒரு மூன்று லட்சம் ரூபாய் வரும் என்று கூறினர்.

ஆனால் அதன் பின் ஒரு எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் கொண்டு வந்துவிட்டனர். நான் அவ்வளவு பணம் எல்லாம் இல்லை என்றேன், சரி நீங்கள் மீதி பணத்தை கொடுத்துவிட்டு, அழைத்து செல்லுங்கள் என்று கூறினர்.

அதற்கு கூட என்னிடம் காசு இல்லை, அப்போது கடவுள் போன்று சீரியல் இயக்குநர் விக்ரமாதித்யன் வந்து ஒரு லட்சத்திற்கு மேல் கட்டினார். நுரைடப்பாவில் தண்ணீர் இருக்கிறது என்று கூறியதால், அவருக்கு இரண்டு நாட்களாக தண்ணீரே கொடுக்கவில்லை.

என் கணவர் இவ்வளவு பெரிய உலகில், ஒரு கிளாஸ் தண்ணீர் கூட எனக்கு கிடையாதா? என்று கேட்டார், நான் உடனே செவிலியர்களிடம் கேட்ட போது, அதெல்லாம் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டனர்.

கடைசியில் என் கணவர் நாக்கு வறண்டு தான் இறந்தார். மருத்துவமனைகளை பொறுத்தவரை பணம் தான் முக்கியம், உயிர் முக்கியமில்லை, நான் என் கணவருக்கு மருத்துவமனையில் என்ன எல்லாம் நடந்தது என்பது தொடர்பான வீடியோ, புகைப்படம் இருக்கிறது.

எங்களுக்கு குழந்தை இல்லை, நான் ஒருத்தி என்ன செய்ய போகிறேன், உறவினர்கள் கூட கடைசி நேரத்தில் அவருக்கு உதவ வரவில்லை, என்று வேதனையுடன் கூறி முடித்தார்.