பாஷா கதாநாயகி நக்மாவின் சுவாரசியமான நிஜ காதல் கதை!!

1204

நக்மாவின் காதல் கதை

நடிகை நக்மா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். கவர்ச்சியால் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் இவர்தான். இவரது தங்கை ஜோதிகா யவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். முதலில் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியைதான் காதலித்து வந்தார் என்று செய்திகள் பரவியது. அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே ஒன்றாக வெளியில் சுற்றினார்கள். சவுரவ் கங்குலி நக்மா ஆகியோரின் புகைப்படங்கள்தான் அவ்வப்போது பத்திரிகைகளில் மற்றும் மீடியாக்களில் அடிக்கடி ட்ரெண்ட்டாகும்.

கிரிக்கெட் போட்டியில் சவுரவ் கங்குலி சரியாக விளையாடவில்லை என்றால் நக்மா மீது மிக மோசமான விமர்சனங்கள் வந்து குவியும். இதையெல்லாம் பார்த்த ஜோடி தங்கள் இருவரின் கேரியரும் பாதிக்கப்படுவதை அறிந்து ஒத்த மனதுடன் பிரிய முடிவெடுத்து விட்டனர். அதன்பின்னர் நக்மா சினிமாவில் வாய்ப்புகள் குறையவே அரசியலில் பிஸியாகி ஆகிவிட்டார்.

தனது தங்கைக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் 45 வயதைக் கடந்தும் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வருகிறார் நக்மா.