நடிகை கௌசல்யா..!

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாயகியாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. தற்போது 39 வயதாகும் இவர், இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை முதல் முறையாக சொல்லி இருக்கிறார் கௌசல்யா.

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கௌசல்யா மாடலிங் துறையில் சாதிக்க விரும்பினார். அவரது தாயின் தோழி மூலம் முதன் முதலில் சொட்டு நீல விளம்பரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படியே நடிப்புலகுக்கு வந்தவருக்கு ஏபரல் 19 என்னும் பட வாய்ப்பைத் தந்தது மலையாளத் திரையுலகு.

தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்கவில் நடித்து புகழின் உச்சத்துக்கு சென்றார். அதன் பின்னர் தமிழ்த்திரையுலகில் சிலகாலம் கோலோச்சிய கௌசல்யா, இப்போது அக்கா, அண்ணி பாத்திரங்களில் நடித்து வருகிறார். கௌசல்யா ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என அவரிடம் பிரபல ஊடகம் ஒன்று கேட்டது.

அதற்கு கௌசல்யா, ‘’என்னோட குடும்பம், என்னோட கணவர், என் குழந்தைகள்ன்னு குறுகிய எண்ணத்தோடு வாழ எனக்கு விருப்பம் இல்லை. பரந்த மனப்பான்மையோட எல்லாருக்கும் இயங்கணும். சிங்கிளா இருக்க எனக்கும் பிடிச்சுருக்கு. சோ, இப்போதைக்கு திருமணப் பேச்சுக்கே இடம் இல்லை.”ன்னு சொல்லிருக்காங்க.


